ezhuththiyal!

 

1.0 எழுத்தியல்!

 

எழுத்து என்பது எழுதப்பட்டது அல்லது வரையப்பட்டது என்று பொருள்படும்.  

 

 தமிழ் எழுத்துக்கள் நான்கு வகைப்படும். 

(i) உயிர் எழுத்துக்கள்                          12

(ii) மெய் எழுத்துக்கள்                         18  

(iii) உயிர்மெய் எழுத்துக்கள்         216   (12x18)

(iv) ஆய்த எழுத்து                                   1

          மொத்தம்                                     247    - தமிழில் நெடுங்கணக்கு எனப்படும். 

 

உயிர்மெய்யும் ஆய்தமும் சார்பெழுத்துக்கள்  எனப்படும்.  

 

உயிர் எழுத்துக்கள் இரு வகைப்படும். 

(i) குற்றெழுத்து            -   அ, இ, உ, எ, ஒ (5)     

(ii) நெட்டெழுத்து        -   ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள (7)     

  

மெய்யெழுத்துக்கள் மூன்று வகைப்படும் 

 (i) வல்லினம்            -      க் , ச், ட் , த் , ப் , ற்

(ii) மெல்லினம்       -      ங் , ஞ , ண் , ந் , ம் , ன்

(iii) இடையினம்    -      ய் , ர் , ல் , வ் , ழ் , ள்                             

 

சுட்டெழுத்துக்கள், வினாவெழுத்துக்கள், இன எழுத்துக்கள்  

 

(i) சுட்டெழுத்துக்கள்

 

அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலில் சுட்டுப் பொருளில் வரும்போது சுட்டெழுத்துக்கள் எனப்படும். இது இரு வகைப்படும். 

அகச்சுட்டு - அவர், இவர், உவர் 

புறச்சுட்டு - அம்மனிதன், இம்மனிதன், உம்மனிதன்   

 

(ii)  வினாவெழுத்துக்கள்

 

எகரம் மொழிக்கு முதலிலும், ஆகாரம் ஓகாரம் மொழிக்கு இறுதியிலும், ஏகாரம் மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வினாப்பொருளில் வரும்போது  வினாவெழுத்துக்கள் எனப்படும்.  

( எ, யா முதலும், ஆ, ஓ ஈற்றும் ஏ இரு வழியும் வினாவாகுமே ) 

 

உதாரணம் -  எவன்?, தந்தையா?, எப்பொருள்? 

 

(iii)  இன எழுத்துக்கள் 

 

உயிர் எழுத்துக்களில்,                    மெய்யெழுத்துக்களில், 

அ        -      ஆ ,                                         வல்லினம் - மெல்லினம்

இ        -       ஈ ,                                                   க்                         ங்

உ        -     ஊ ,                                                  ச்                          ஞ

எ         -      ஏ ,                                                   ட்                         ண்

ஐ        -      இ ,                                                  த்                           ந் 

ஒள   -      உ                                                    ப்                           ம்

                                                                            ற்                          ன்

 இனவெழுத்தாகும்.                            

 

குற்றியல் உகரமும் குற்றியல் இகரமும்

உகரம் எகரம் ஆகிய உயிர்க்குறில்களுக்கு மாத்திரை ஒன்று ஆகும். இவை சார்பு எழுத்துக்களில் அடங்கும். 


குற்றியலுகரமானது, தனிக் குற்று எழுத்தல்லாத மற்றைய எழுத்துக்களுக்குப் பின்னே, சொல்லின் இறுதியில் வல்லின மெய்களில் ஏறி நிற்கும் உகரமாகும். 


குற்றியலுகரம் ஈற்று எழுத்தாகிய தன்னைத் தொடர்கின்ற அயல் எழுத்தின் வகை பெயரிடப்படும். 
(i) நெடில் தொடர் குற்றியலுகரம் 
உதாரணம் : காடு, தூது 


(ii) ஆய்த தொடர் குற்றியலுகரம் 
உதாரணம் : எ/கு  

(iii) உயிர்த் தொடர் குற்றியலுகரம்   
உதாரணம் : வரகு, விடாது 


(iv) வன் தொடர் குற்றியலுகரம்   
உதாரணம் : கொக்கு, பற்று 

 

(v)  மென் தொடர் குற்றியலுகரம்   
உதாரணம் :  அம்பு, வண்டு 

(vi) இடைத்  தொடர் குற்றியலுகரம்   
உதாரணம் : நல்கு, சால்பு 

தனிக் குற்று எழுத்துக்குப் பின் வல்லின மெய்களில்வரும் உகரமும், மெல்லின மெய்களிலும் இடையின மெய்களிலும் வரும் உகரமும் முற்றியலுகரமாகும்
உதாரணம் : நாக்கு, கடு, திரு, கதவு, கொசு 


குற்றியலிகரமானது, யகரம் வந்து புணருமிடத்து குற்றியலுகரம் திரிந்த இகரமாகும். (இகரம் தன் மாத்திரையில் குறைந்து ஒலிப்பது) 
உதாரணம் : நாகு + யாது = நாகியாது

ஐகாரக் குறுக்கம் 
ஐகாரம் தன் மாத்திரையில் குறைந்து குறில் போல் ஒலிப்பது. 
உதாரணம் : ஐயர், தையல், பூனை, மலைப்பாம்பு 

ஒளகாரக் குறுக்கம் 
ஒளகாரம் தன் மாத்திரையில் குறுகி ஒலிப்பது 
உதாரணம் : ஒளவையார்,  வெளவால்  

மகரக்குறுக்கம் 
மகரத்திற்கு அயலில் னகர, ணகர ங்கள் வரும்போது மகரம் தன் மாத்திரையில் குறுகி ஒலிக்கும். 
உதாரணம் : கேண்ம், பொருண்ம் 

ஆய்தக்குறுக்கம் 
ஆய்த எழுத்தானது ள் ல் வரும் இடத்தில் குறுகி ஒலிக்கும். 
/ முள் + தீது = மு/மீது 

உயிரளபெடை

தனது மாத்திரை நீண்டு ஒலிக்கின்ற உயிர் நெட்டெழுத்து ஏழுமாம். எதற்கு மாத்திரை மூன்று.  

உதாரணம் : வடை (இ இ), போய் (இ) 


ஒற்றளபெடை
தனது  மாத்திரையில் நீண்டு ஒலிக்கின்ற மெய் எழுத்தும் ஆய்த எழுத்தும் ஆகும். 
உதாரணம் : இலங்கை - இலங்ங்கை, சங்கு - சங்ங்கு 


முதனிலை> இறுதிநிலை> இடைநிலை மெய்மயக்கம்   

 

 

பயிற்சி!

 

Loading...">https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfADYqilx4mcjlMPyaBvdffqDlBXVD2yi18ewSm5NW-RWB8yQ/viewform?embedded=true" width="760" height="500" frameborder="0" marginheight="0" marginwidth="0">Loading...