solliyal!

 

2.0 சொல்லியல்

 

சொற்கள் பொதுவாக நான்கு வகைப்படும் 


(i) பெயர்ச் சொல்          - உதாரணம் : வேங்கை

(ii) வினைச் சொல்      - உதாரணம் : சென்றான்   

(iii) இடைச் சொல்       - உதாரணம் : மற்று 

(iv) உரிச் சொல்            - உதாரணம் : நனி 

 

 இருதிணை, ஐம்பால், மூவிடம்

 

(அ) இருதிணை - உயர் திணை, அஃறிணை என இருவகைப்படும்.  

           (i) உயர்திணை - உயிருள்ள பகுத்தறிவுள்ள மக்கள், தேவர், நரகர் ஆகிய     மூவகையினரும்  இதில் அடங்குவர்.  

         (ii) அஃறிணை - விலங்கு, பறவை முதலிய உயிருள்ள பொருள்களும், நிலம், நீர் முதலிய உயிரில்லாத பொருள்களும் இதில் அடங்கும். 

 

(ஆ) ஐம்பால் 

ஆண்பால்     -  வந்தான், ஆடவன் 

பெண்பால்    -  வந்தாள்,  மங்கை                     -        உயர்திணை 

பலர்பால்      -  வந்தார், மக்கள் 

 

ஒன்றன்பால்   -  அது, பசு 

பலவின்பால்  -   அவை, பசுக்கள்                 -           அஃறிணை 

 

(இ) மூவிடம் - இருதிணையாகிய ஐம்பால் பொருளை உணர்த்தும் சொற்கள் தன்மை, முன்னிலை, படர்க்கை என்னும் மூவிடத்தை வகிக்கும். 

(i) பேசும் பொருள் - தன்மை - உதாரணம் : நான் வந்தேன் 

(ii) பேசும் பொருளினால் எதிர்முகமாக்கப்பட்டுக் கேட்கும் பொருள் - முன்னிலை - உதாரணம் :  நீங்கள் வந்தீர்கள் 

(iii) பேசப்படும் பொருள் - படர்க்கை - உதாரணம் : அவர்கள் வந்தார்கள்  

 

இருவகை வழக்கு


சொற்கள் இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என்னும் இருவழக்காகும்.  

 

 (அ) இயல்பு வழக்கு - எச்சொல் எப்பொருள் அமைந்ததோ அப்பொருளை அச்சொல்லால் வழங்குதல் இயல்பாகும். இது மூன்று வகைப்படும். 


(i) இலக்கணமுடையது - இலக்கண நெறியால் வருவது ; உதாரணம் : நீர்
(ii) இலக்கணப்போலி - இலக்கணம் இல்லாதுவிடினும், இலக்கணம் உள்ளது போன்று வழங்கப்பட்டு வருவது ; உதாரணம் : நகர்ப்புறம் - புறநகர் , கோவில் - கோயில் 
(iii) மருஉ - இடையில் சில எழுத்துக்கள் கெட்டும், திரிந்தும், தோன்றியும் இலக்கணம் சிதைவடைந்து  தானே மருவி வருவது. உதாரணம் : அருமருந்தன்ன - அருமருந்த, யார் - ஆர் 


(ஆ) தகுதி வழக்கு - ஒரு பொருளை அறிவதற்குரிய இயல்பான சொல்லால் குறிப்பிடாது வேறொரு சொல்லால் சொல்வதே தகுதி எனக் கொள்வது. இதுவும் மூவகைப்படும்.

 

(i) இடக்கரடக்கல் - நன்மைக்களிடம் சொல்லத் தகாத சொல்லை மறைத்து பிற வார்த்தையால் சொல்வது.  
உதாரணம் : 
இயல்பானது                         தகுதி வழக்கு 
மலங்கழித்தல்               கொல்லைக்குப் போதல் 


(ii) மங்கலம் - மங்கலம் அல்லாததை தவிர்த்து மங்கலமாக பகர்வது. 
உதாரணம் : 
மங்கலமில்லாதது                   மங்கலவழக்கு
செத்தார்                                         காலமானார், இறையடி சேர்ந்தார் 
இடுகாடு                                          நன்காடு 

(iii) குழுஉக் குறி - ஒவ்வொரு கூட்டத்தாரும் தமக்குள் யாதாயினும் ஒரு காரணத்தினால் ஒரு சொல்லின் பொருளை வேறொரு சொல்லினால் குறிப்பது. 
உதாரணம் : 
சொல்விளம்பி - வேடர் கள்ளைக் குறிப்பது  
பறி - பொற்கொல்லர்  பொன்னைக் குறிப்பது  


 

பெயர்ச் சொற்களின் வகை


(i) பொருள் பெயர் - மண், மரம்
(ii) இடப்பெயர்       - நிலம், ஊர்
(iii) காலப்பெயர்    - கோடை, ஆண்டு 
(iv) சினைப்பெயர் - கண், இலை
(v) குணப்பெயர்  - அன்பு, அறிவு 
(vi) தொழில்பெயர் - உழுதல், உறங்கல்     
    

பெயர்ச் சொற்களின் பொருள் காரணம் 



(i) காரணப் பெயர் - எதாயினும் ஒரு காரணம் பற்றி வருவது 
  உதாரணம் : பறவை - பறப்பதால்  பறவை என்று பெயர பெற்றது.
                          

 (ii) இடுகுறிப் பெயர் - ஒரு காரணமும் இல்லாமல் வருவது.  
உதாரணம் : மழை, கடல் 
  
(iii) காரணவிடுகுறிப் பெயர் - காரணம் கருதியபொழுது காரணமாகவும், காரணம் கருதாத பொழுது  இடுகுறியாகவும் வருவது. 
 உதாரணம் : நாற்காலி, அந்தணன் 


 

வேற்றுமை


பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை ஆகும். வேற்றுமை ஏற்பது பெயர்ச் சொல்லின் சிறப்பியல்பாகும்.  


(i) முதல் வேற்றுமை
இது எழுவாய் வேற்�ுமை என்றும் அழைக்கப்படும். 
 உருபு - இல்லை
உதாரணம் - உழவன் உளுகின்றான்  

(ii) இரண்டாம் வேற்றுமை 
இது வேற்றுமை என்றும் பெயர் பெறும்.  
உருபு - ஐ
சொல்லுருபு - இல்லை 
பொருள் -  செயற்படுபொருள்      
இது 6 வகைப்படும்.
கோயிலைக் கட்டினான் - ஆக்கப்படுபொருள் 
கோட்டையை இடித்தான் - அழிக்கப்படுபொருள் 
ஊரை அடைந்தான் - அடையப்படுபொருள்    
இல்லத்தைத் துறந்தான் - துறக்கப்படுபொருள்  
மலரை ஒத்தாள் - ஒக்கப்படுபொருள் 
பொன்னை உடையான் - உடமைப்பொருள் 

(iii) மூன்றாம் வேற்றுமை 
இது ஒடு வேற்றுமை என்றும் பெயர் பெறும். 
உருபுகள் - ஆல், ஆன், ஒடு, ஓடு 
பொருள்கள் - கருவி, கருத்தா (ஆல், ஆன்), உடனிகழ்ச்சி (ஒடு, ஓடு)

உதாரணம் : வாளால் வெட்டினான்                          கருவிப்பொருள் 
                     வாளான் வெட்டினான் 
                      தச்சனால் ஆக்கப்பட்ட மேசை            கருத்தாப்பொருள் 
                     தச்சனால் ஆக்கப்பட்ட மேசை 

                    ஆசிரியனொடு மாணாக்கன் சென்றான்            உடனிகழ்ச்சிப் 
                    ஆசிரியனோடு மாணாக்கன் சென்றான்                பொருள் 

(iv) நான்காம் வேற்றுமை  
இது கு வேற்றுமை என்றும் பெயர் பெறும். 

உருபு - கு 
பொருள்கள் :
கோடல்  பொருள்  - ஏழைக்கு பொன் கொடுத்தான் 
பகை தொடர் பொருள் - பாம்புக்கு பகை கீரி
நட்புத்தொடர் பொருள் - பாரிக்கு நண்பர் கபிலர் 
தகுதியுடை பொருள் - அரசனுக்குரியது மணிமுடி 
முதற்காரணகாரியப் பொருள் - தாலிக்கு பொன் உருக்கினான் 
நிமித்த காரணகாரியப் பொருள் - கூலிக்கு வேளை செய்தான்  
முறைக்கியைப் பொருள் - வசுதேவருக்கு மகன் கண்ணன் 

(v) ஐந்தாம் வேற்றுமை  
இது என் வேற்றுமை என்றும் பெயர் பெறும். 
உருபுகள் - இன், இல் 
பொருள் - நீக்கம், ஒப்பு, இல்லை, ஏது
உதாரணம் :
மழையில் வீ ழ் அருவி - நீக்கப் பொருள் 
பாலில் வெளிது கொக்கு - ஒப்புப் பொருள் 
இலங்கையின் வடக்கு இந்தியா - எல்லைப்பொருள் 
கல்வியின் உயர்ந்தவன் கம்பன் - ஏதுப்பொருள்

(vi) ஆறாம் வேற்றுமை 
அது வேற்றுமை என்றும் பெயர் பெறும். 
உருபுகள் - அது, ஆது 
பொருள் - கிழமைப்பொருள் 
இது இரு வகைப்படும் : 
தற்கிழமை - தனது கை, பிறிதின் கிழமை - எனது புத்தகம் 

(vii) ஏழாம் வேற்றுமை 
இது கண் வேற்றுமை என்றும் பெயர் பெறும். 
உருபுகள் - கண், இல், உள், இடம் 
பொருள் - எடப்பொருள்
உதாரணம் : 
மனிதருள் வந்து தோன்றிய மாணிக்கம் (உள்)
தீபத்தின்கண் இருக்கும் ஒளி (கண்) 
மணியிடம் உள்ள புத்தகம் (இடம்) 


(viii) எட்டாம் வேற்றுமை 
இது விளி வேற்றுமை என்று பொருள் படும். 
பொருள் -விளிக்கப்படு பொருள்
உதாரணம் - கண்ணா இங்கே வா!

 

பயிற்சி!
https://goo.gl/forms/kJMSzZDx7lIbEX2O2