5.0 யாப்பிலக்கணம்
சந்தச்சொற்கள்
- கவிதையில் ஒரே ஒசையில் முடியும் சொற்கள் சந்தச் சொற்களாகும்.
- சந்தச்சொற்கள் கவிதைக்கு இனிய ஓசை நயத்தை தருகின்றன.
எடுத்துக்காட்டு :
உழைப்பில் கிடைப்பது பணம்.
உறவினை வளர்ப்பது குணம்.
மோனை
- மோனை என்றால் முதல் எழுத்து ஒன்றித்து வருதல் என்று பொருள்படும்.
- கவிதையில் அடிதோறும் முதல் எழுத்து ஒரே இனமாக இருப்பின் அடிமோனை எனப்படும்.
எடுத்துக்காட்டு :
பழனி மலைக்குச் சென்று வந்தேன்.
பஞ்சா மிருதம் கொண்டு வந்தேன்.
- கவிதையில் ஒவ்வொரு சீரிலும் முதல் எழுத்து ஒரே இனமாக இருந்தால் சீர்மோனை எனப்படும்.
எடுத்துக்காட்டு :
கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்குத் தக. (திருக்குறள்)
எதுகை
- கவிதையில் அடிதோறும் இரண்டாம் எழுத்து ஒரே இனமாக ஒன்றி வருவது எதுகையாகும்.
எடுத்துக்காட்டு :
மூங்கில் வெட்டி வாழ்ந்திடுவார்
முனைந்து மூங்கில் வெட்டிடுவார்!
ஆங்கு அவற்றைக் கட்டுக்கட்டி
ஆலை நோக்கிச் செலுத்திடுவார்!
அசை
- எழுத்துகள் தனித்தோ இணைந்தோ சரியான ஒலியுடன் சீருக்கு உறுப்பாகி நின்றால் அசை எனப்படும்.
- அசை பிரிக்கும் போது பொருள் பார்க்கக்கூடாது.
- சீர்களைத் தனித்தனியாக அசைப் பிரித்தல் வேண்டும்.